ALAM SEKITAR & CUACA

2,500 யுனிசெல் மாணவர்கள் வெள்ள உதவிப் பணியில் பங்கெடுத்தனர்

6 பிப்ரவரி 2022, 4:15 AM
2,500 யுனிசெல் மாணவர்கள் வெள்ள உதவிப் பணியில் பங்கெடுத்தனர்

கோலா சிலாங்கூர், பிப் 6- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பணியில் யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் 2,512 மாணவர்கள் ஈடுபட்டனர்.

மொத்தம் 68 உதவித் திட்டங்களில் மாணவர்களும் பல்கலைக்கழக பணியாளர்களும் ஈடுபட்டதாக யுனிசெல் வேந்தர் ராஜா டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ அர்ஷாட் அல்ஹாஜ்  ராஜா துன் ஊடா அல்ஹாஜ் கூறினார்.

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட உயர்கல்வி மாணவர்களில் யுனிசெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் இந்த நிவாரணப் பணியில் 2,254 மாணவர்களும் 258 பணியாளர்களும் பங்கெடுத்தனர் என்றர் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100  பணியாளர்களுக்கு யுனிசெல் கல்வி அறங்காப்பு நிதியிலிருந்து 30,000 வள்ளி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 15வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.