ஷா ஆலம், பிப் 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 9,117 ஆக அபரிமித உயர்வு கண்டுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 7,234 ஆகவும் நேற்று முன்தினம் 5,720 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரே நாளில் 1,500 கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு கண்டுள்ளது.
புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 4 ஆயிரத்து 131 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மாநில வாரியாக நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சிலாங்கூர், 2,490, சபா 1,205, ஜொகூர் 901, கோலாலம்பூர் 584, கெடா 847, கிளந்தான் 673, பினாங்கு 522, பகாங் 470, நெகிரி செம்பிலான் 416, பேராக் 231, திரங்கானு 123, புத்ரா ஜெயா, 115, பெர்லிஸ் 88, சரவா 42, லவுபான் 15.


