ECONOMY

உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி நிதி- விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

3 பிப்ரவரி 2022, 12:46 PM
உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி நிதி- விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், பிப் 3- குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு  அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடிய பட்சம் 5,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி கட்டண நிதிக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் இம்மாதம் 24 ஆம் தேதியாகும்.

இதற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பாரங்களைப் பெறுவதற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அலுவலகத்தில் அமைந்துள்ள பி40 உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி செயலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலக முகவரி

PEJABAT YB TUAN GANABATIRAU A/L VERAMAN, 

EXCO Kebajikan Masyarakat, Pekerja dan Kerajaan Prihatin Negeri Selangor, Tingkat 5, Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, 40503 Shah Alam, Selangor Darul Ehsan.

TEL: 03-55447307/7305

E-MAIL: staffexco2014@gmail.com

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.