ஷா ஆலம், ஜன 31- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக நாளை நடைபெறவிருக்கும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த கொண்ட்டாட நிகழ்வு எனும் மந்திரி புசார் போஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
அந்த பேஸ்புக் தளத்தில் நடத்தப்படும் அங்பாவ் போட்டியில் பங்கேற்பதன் மூலம் ரொக்கப் பரிசை வெல்வதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு 10,000 வெள்ளி மதிப்பிலான அங்பாவ் பரிசை வெற்றி கொள்ளுங்கள் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
கோவிட்-19 நோய்த் தொற்று இன்னும் தணியாத நிலையில் கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் இயங்கலை வாயிலாக சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த ஒரு மணி நேர சிறப்பு சீனப்புத்தாண்டு நிகழ்வு பௌத்த மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல்குழுவின் தலைவர் டத்தோ தெங் சாங் கிம்மின் பேஸ்புக் பக்கத்திலும் ஒளிபரப்பு செய்யப்படும்.


