ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  91 குடும்பங்களுக்கு உதவ எம்.பி.ஐ RM27,300 ஒதுக்கியது.

30 ஜனவரி 2022, 1:43 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  91 குடும்பங்களுக்கு உதவ எம்.பி.ஐ RM27,300 ஒதுக்கியது.

காஜாங், 30 ஜன:  பெரானாங் துணை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  91 குடும்பங்களுக்கு உதவ சிலாங்கூர் மந்திரி புசார் கழகம்  அல்லது எம்பிஐ மொத்தம் RM27,300 ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ரொக்கமாக RM300 கிடைத்ததாகவும், இந்த நன்கொடை அவர்களின் சுமையை குறைக்கும் என்று நம்புவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி நோரிடா முகமட் சிடெக் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த துணை மாவட்டத்தில் மொத்தம் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவு மக்களுக்கு பெரும் சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியது.

எனவே, இந்த சிறிய பண உதவியை  வழங்க எம்பிஐ  கேட்டு கொள்ளப்பட்டது. இந்த உதவி பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் என நம்புகிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பெரானாங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்போங் சேசபன் பத்து மினாங்கபாவ் சமூகக் கூடத்தில்  நிதி வழங்கும் நிகழ்விற்குப் பிறகு சிலாங்கூர்கினியிடம் கூறினார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியுடன்  உணவு கூடைகளை விநியோகித்தது மற்றும் வெள்ளத்திற்கு பிந்தைய சுத்தம் செய்யும் பணிகளுக்கு உதவ தன்னார்வலர்களை  எம்.பி.ஐ  வழங்கியதாக  நோரிடா கூறினார்.

நிறைய உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன, அது அவ்வப்போது தொடரும். இந்த உதவிகள் அனைத்தும் ஏற்கனவே அறிவித்தபடி RM1.5 மில்லியன் ஒதுக்கீடுகளின்  உள்ளடக்கம்உள்ளடக்கம்”  என்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி, பெரானாங்கைச் சுற்றியுள்ள கம்போங் சேசபன் பத்து மினாங்கபாவ், கம்போங் செசபான் பத்து ரெம்பாவ்,  கம்போங்  சுங்கை ஜெய், கம்போங் ஜாலான் எனாம் காகி கம்போங் பாயா தஞ்சோங், கம்போங் சேசபன் கெலுபி மற்றும் கம்போங் புக்கிட் கெப்போங்போங் ஆகிய ஏழு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.