ECONOMY

அபராதத்தை தவிர்க்க பிப். 28 க்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- எம்.பி.பி.ஜே. வலியுறுத்து

25 ஜனவரி 2022, 7:11 AM
அபராதத்தை தவிர்க்க பிப். 28 க்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- எம்.பி.பி.ஜே. வலியுறுத்து

ஷா ஆலம், ஜனவரி 25 - வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிக்குள் தங்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்திவிடும்படி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியிலுள்ள சொத்து உரிமையாளர்கள் நினைவூட்டப்பட்டுள்ளனர்.

அபராதம் விதித்க்கப்படுவதை தவிர்க்க  மாநகர் மன்ற அலுவலக முகப்பிடங்களில், இணையம் வாயிலாக மற்றும் அதன் மொபைல் செயலி மூலம் வரியைச் செலுத்தி விடும்படி மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

பொது மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவதற்காக மாநகர் மன்றத் தலைமையகத்தில் உள்ள கட்டணம் செலுத்தும் முகப்பிடங்கள்  பிப்ரவரி மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்  என்று மாநகர் மன்றம வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாடிக்கையாளர்கள் ஸ்ரீ டாமன்சாரா, தாமான் மெகா மற்றும் டாமன்சாரா டாமாய் ஆகிய  இடங்களில் உள்ள Ez-Pay  முகப்பிடங்களிலும் வரியைச் செலுத்தலாம் என்று அது கூறியுள்ளது.

வரி செலுத்த வரும் வாடிக்கையாளர்கள் தேசிய பாதுகாப்பு  மன்றம் நிர்ணயித்த நிலையான செயலாக்க நடைமுறைகளைப் (எஸ்.ஒ.பி.) பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது மக்கள்  epay@mbpj.gov.my இணையதளம் மூலமாகவோ அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலமாகவோ பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய ecukai@mbpj  செயலி  மூலமாகவும் வரி செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று மாநகர் மன்றம் தெரிவித்தது..

மேல் விபரங்களுக்கு  03-7956 3544  இணைப்பு 102/103/108/109  என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.mbpj.gov.my  என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.