ECONOMY

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு 87 விருது பெற்றனர்

22 ஜனவரி 2022, 11:08 AM
சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு 87 விருது பெற்றனர்

கிள்ளான், ஜன 22- சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின்  76வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில்  87 பேர் உயரிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்றனர்.

இந்த விருதளிப்பு நிகழ்வில் சிலாங்கூர் துங்கு பெர்மைசூரி நோராஷிகின், சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

விருது பெறுவோர் பட்டியலில் சிலாங்கூர் அரச மன்ற உறுப்பினர் துங்கு டத்தோ சேடியா ரம்லி அல்ஹாஜ் துங்கு ஷாருடீன் ஷா அல்ஹாஜ் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு டர்ஜா கெராபாட் கெடுவா (டிகே II) விருது வழங்கப்பட்டது.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலிக்கு 'டத்தோஸ்ரீ' அந்தஸ்து கொண்ட ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ் பி.எம்.எஸ்.) விருது வழங்கப்

பட்டது.

டத்தோ படுகா மஹ்கோத்தா சிலாங்கூர் (டிபிஎம்எஸ்) விருது பெற்ற ஆண்களுக்கு 'டத்தோ' மற்றும் பெண்களுக்கு 'டத்தின் படுகா' என்ற என்ற அந்தஸ்தை தாங்கி வரும் மக்கோத்தா சிலாங்கூர்  விருதை பெல்ஜியத்துக்கான மலேசியத் தூதர் டத்தோ அகமது ரோஸியான் அப்துல் கனி உள்பட ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு சிற்றரசுக்கான  மலேசிய தூதர் முகமது தாரிட் சுஃபியன் மற்றும் கனடாவுக்கான மலேசிய தூதர் அனிஸான் சித்தி ஹஜார் அடனின் ஆகியோரும் விருது பெற்றவர்களில் அடங்குவர்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி, சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது சயாபிக் அப்துல்லா, இராணுவத் தலைமையக பாதுகாப்பு உளவுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் அனுவார் முகமது அலி மற்றும்  மலேசிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டத்தோ ஜூல் ஹெல்மி ஆகியோரும் இந்த விருதைப் பெற்றனர்.

டர்ஜா கெபேசரான் டத்தோ-சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா (டி.ஐ.எஸ்.எஸ்.) விருது ராணுவ தலைமையக பல் மருத்துவ இயக்குநர் ஜெனரல் பிரிஜ் ஜெனரல் டாக்டர்

முகமது ரோஸ்லி மஜித் உட்பட ஒன்பது நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.