ECONOMY

காரில் பிரசவம்- மலாய் மாதுவுக்கு உதவிய பக்தர்கள்- பத்துமலை திருத்தலம் அருகே சம்பவம்

18 ஜனவரி 2022, 12:46 PM
காரில் பிரசவம்- மலாய் மாதுவுக்கு உதவிய பக்தர்கள்- பத்துமலை திருத்தலம் அருகே சம்பவம்

ஷா ஆலம், ஜன 18- பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர்  ஆலயம் அருகே காரில் பிரசவ வலி கண்ட மலாய் மாதுவுக்கு உதவிய தமிழப் பத்திரிகை நிருபர் ஒருவர் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பத்துமலைத் திருத்தலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்த மலாய் மாது ஒருவர் உதவி கோரி கூச்சலிட்டதை கேட்டதாக எல்.கே. செவந்திராஜா கூறினார்.

சம்பந்தப்பட்ட காரை அணுகிய போது அம்மாது பிரசவ வலியால் துடிப்பதைக் கண்டேன். உடனடியாக நாங்கள் வேஷ்டியைக் கொண்டு காரின் கண்ணாடிகளை மறைத்தோம். அம்மாது காரிலேயே சுகப்பிரசவம் கண்டார். தாயும் சேயும் நலமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் அந்த மாதுவும் குழந்தையும் மருத்துவக் குழுவினரால் மருத்துவ மனைக்கு  கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் அந்த மாதுவின் கணவருடன் தாம் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.