ECONOMY

70 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

18 ஜனவரி 2022, 3:01 AM
70 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 18- நாட்டில் நேற்று வரை  70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு, சரவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 93 லட்சத்து 64 ஆயிரத்து 326 பேர் இத்தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு தகுதி பெறுவதாகவும் அது குறிப்பிட்டது.

விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் நேரில் சென்று ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள கீழ்க்கண்ட தடுப்பூசி மையங்கள் வழங்குகின்றன.

  1. PPV World Trade Centre, Kuala Lumpur (பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை)

    2. PPV Axiata Arena, Bukit Jalil (பிற்பகல் 2.00 மணி முதல் 8.00 மணி வரை)

    3. PPV Ideal Convention Centre, Shah Alam (பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை)

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.