ECONOMY

தைப்பூசத்திற்கான வழிகாட்டி பக்தர்கள் சிறு வணிகர்களின் நலனை  புறக்கணித்துள்ளதை காட்டுகிறது.

14 ஜனவரி 2022, 3:33 PM
தைப்பூசத்திற்கான வழிகாட்டி பக்தர்கள் சிறு வணிகர்களின் நலனை  புறக்கணித்துள்ளதை காட்டுகிறது.

கிள்ளான் 13 டிச ;- தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாதிக் தைப்பூச கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் போது, விழாவுக்கான எஸ்ஓபியை இப்பொழுது  அறிவித்துள்ளார்.

இதில்  ஏற்கனவே, வணிகத்துக்கு தங்களை தயார் செய்து கொண்டவர்களின் நலனையும், பக்தர்கள் நலனையும் இம்மியும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் செயல் பட்டுள்ளது, வெறுப்பையும் எரிச்சலையும் கொடுத்துள்ளது என்கிறார், கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.

தைப்பூசம் என்பது மலேசியாவில் பெரிய அளவில் மற்றும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்துக்கள், பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர்  திருக்கோயில் முதல் சிலாங்கூரின் பல ஸ்ரீ சுப்ரமணியர்  ஆலயங்களில் இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதில் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர்  திருக்கோயில் முக்கிய ஒன்றாகும், அதற்கான வழிகாட்டியில் (SOP) ஒரு நாளைக்கு 6000 பக்தர்கள் மட்டுமே விழாக்களுக்கு வரலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர்  திருக்கோயில் பரந்த நிலையை கருத்தில் கொண்டால் இந்த கட்டுப்பாடு நியாயமற்றதாகக் கருதப் படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கைக்கும்  கோயில்களின் பரப்பளவுக்கு ஏற்ப மிக பரிவுடன் பரிசீலிக்க வேண்டிய ஒரு விவகாரம் என்பதால் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட  வழிகாட்டிகளின் விதிகளுக்கு சில தளர்வுகள் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.

முகக்கவரி, இடைவெளி போன்ற அம்சங்கள் கண்டிப்பாக கடைபிடிப்பதன் வழி, கோயில் அளவிற்கு ஏற்ப அதிக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதும், கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுபாடுகள் (SOP) சிறு வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டத்தையும் மன உளைச்சல்களையும் வழங்கும் எல்லா வகையான கட்டுப்பாடுகளையும்

மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  வலியுறுத்தினார்.

நிச்சயமாக, கடந்த 2 ஆண்டுகளில் PKP காலத்தின் போது ஏற்பட்ட பொருளாதார சவால்களிலிருந்து மீட்சி பெறும்  வியாபாரிகள் முயற்சிக்கு, அரசாங்கம்  பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடாது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறு வியாபாரிகள்  செய்யும் முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமே தவிர அவர்களை  மேலும் புண்படுத்தும்  விதமாக  இருக்க கூடாது.

அதே வேளையில் இந்திய சமூகம் அரசாங்கத்தின் சுகாதார பாதுகாப்பு  அம்சங்களை (SOP கோவிட் 19) பின் பற்றி நடக்கவும் தவறக்கூடாது  என்றார் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.