ஷா ஆலம், ஜன 14- கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான கூடுதல் வாக்காளர் பட்டியலை இன்று தொடங்கி சரிபார்க்கலாம் என்று மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) அறிவித்துள்ளது.
புதிய வாக்காளர்களாக இயல்பாக சேர்க்கப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 57 லட்சத்து 18 ஆயிரத்து 760 பேரை இந்த கூடுதல் வாக்காளர் பட்டியல் உள்ளடக்கியுள்ளது.
இது தவிர, தேர்தல் தொகுதியை மாற்றிய 25,220 பேரும் அந்தஸ்து/பிரிவை மாற்றிய 9,293 பேரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான இந்த கூடுதல் வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு இவ்வாண்டு ஜனவரி 14 ஆம் தேதி அரசு பதிவேட்டில் இடம் பெற்றது.
இந்த சரிபார்க்கும் பணியை மாநில தேர்தல் அலுவலக அகப்பக்கங்கள் மற்றும் http://ppn.spr.gov.my என்ற தேர்தல் ஆணை அகப்பக்கம் வாயிலாகவும் அல்லது 03-88927018 என்ற எண்கள் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்


