கோலாலம்பூர் ஜன, 13- நாட்டில் நேற்று வரை 97.8 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 28 லடசத்து 93 ஆயிரத்து 234 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.மேலும் 99 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரத்து 181 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.
இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90.8 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 58 ஆயிரத்து 992 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் 88 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 70 ஆயிரத்து 412 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
நேற்று 255,384 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 3,170 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் 2,016 பேருக்கு முதலாவது தடுப்பூசியும் 250,198 பேருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 35 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது.
ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 85 லட்சத்து 39 ஆயிரத்து 533 ஆகும்.
ECONOMY
97.8 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
13 ஜனவரி 2022, 7:21 AM


