கோலாலம்பூர், ஜன 7 - நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,543 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,270 ஆக இருந்தது.புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 76 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நோய்த் தொற்று கண்டவர்களில் 53 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் மேலும் 3,490 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் எதிநோக்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அபதுல்லா கூறினார்.
253 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 130 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று 3,484 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 5 ஆயிரத்து 292 ஆகப் பதிவாகியுள்ளது.
நேற்று புதிதாக ஏழு தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,543 ஆக உயர்வு
7 ஜனவரி 2022, 5:51 AM


