ALAM SEKITAR & CUACA

“ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான்“ திட்ட பயனாளிகளுக்கும் நீர் கட்டண விலக்களிப்பு

5 ஜனவரி 2022, 11:08 AM
“ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான்“ திட்ட பயனாளிகளுக்கும் நீர் கட்டண விலக்களிப்பு

ஷா ஆலம், ஜன 5- “ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான்“ திட்ட பயனாளிகளும் ஒரு மாத தண்ணீர் கட்டண விலக்களிப்பை பெறுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளனர்.

வீடுகளுக்கான கட்டண குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் இத்திட்டத்தில் பயன் பெற முடியும் என்ற பெருங்ருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

எனினும், பயனாளிகளின் கூடுதல் கட்டண பில்லை கழித்தப் பின்னர் எஞ்சியிருக்கும் தொகை மட்டுமே இந்த கட்டண கழிவுக்கு தகுதி பெறும் என்று அது தெரிவித்தது.

இதனிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்னர் அல்லது செலுத்தாத  நிலையில் அவர்களுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்தித் தருவது குறித்து தமது தரப்பு ஆலோசித்து வருவதாகவும் ஆயர் சிலாங்கூர் குறிப்பிட்டது.

இருந்த போதிலும் நிலுவையில் உள்ள தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பயனீட்டாளர்கள் செலுத்தியாக வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

இது தவிர, வெள்ளம் காரணமாக உடைந்து போன அல்லது காணாமல் போன தண்ணீர் மீட்டர்களை மாற்றுவதற்கான செலவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

ஜனவரி மாதத்திற்கான நீர் கட்டண கழிவு சலுகை தங்கள் வழங்கப்படாத பட்சத்தில் அல்லது பிப்ரவரி மாத பில்லில் அக்கட்டணம் சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில் 15300 அல்லது என்ற எண்களில் அல்லது www.airselangor.com  என்ற அகப்பக்கம் வாயிலாக உதவி மையத்தை தொடர்பு கொள்ளும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.