ECONOMY

நாட்டில் நேற்று 201,716 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

4 ஜனவரி 2022, 9:50 AM
நாட்டில் நேற்று 201,716 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

கோலாலம்பூர், ஜன 4- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி வரை 2 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரத்து 655 பெரியவர்கள் அல்லது 97.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 545 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 58 ஆயிரத்து 498 பேர் அல்லது 87.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 28 லட்சத்து 49 ஆயிரத்து 786 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாட்டில் 208,327 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 2,768 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 3,843 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 201,716 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 80 லட்சத்து 55 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 66  லட்சத்து 27 ஆயிரத்து 119 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.