கோலாலம்பூர், டிச 27 - புதிய கோவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 2,778 ஆகப் பதிவானது.இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த மொத்த எண்ணிக்கையை 27 லட்சத்து 41 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் களில் 2,718 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள வேளையில் எஞ்சியோர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
வெளிநாடுகளிவிருந்து வந்தவர்கள் மூலம் 129 சம்பவங்களும் உள்ளூரில் 2,649 சம்பவங்களும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் 306 தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 170 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று புதிதாக இரண்டு புதிய நோய்த் தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 2,778 ஆக குறைந்தது
27 டிசம்பர் 2021, 4:33 AM


