HEALTH

நாட்டில் நேற்று வரை 53 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

26 டிசம்பர் 2021, 6:43 AM
நாட்டில் நேற்று வரை 53 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 26- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 53 லட்சத்து 89 ஆயிரத்து 370 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று மட்டும் 23,698 பேருக்கு இந்த மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர நாட்டிலுள்ள பெரியவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரத்து 291 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்த பட்சம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனிடையே, நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 87.2 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 45 ஆயிரத்து 182 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 90.2 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 39 ஆயிரத்து 706 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

நேற்று மொத்தம் 25,457 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 23,698 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் 1,244 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 515 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர். 

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.