ECONOMY

தனித்து வாழும் தாய்மார்களே சிலாங்கூர் அரசு வழங்கும் உதவிகளை பெற முன்வாருங்கள்.

23 டிசம்பர் 2021, 4:04 PM
தனித்து வாழும் தாய்மார்களே சிலாங்கூர் அரசு வழங்கும்  உதவிகளை பெற முன்வாருங்கள்.

ஷா ஆலம், டிச 7- சிலாங்கூரின்  ஏழைகளுக்கு  உதவ அதிகமான திட்டங்கள்  இருந்தும்,  மாநில அரசு வழங்கும்  உதவிகளைப் பெற முன் வராதது ஏமாற்றம் அளிக்கிறது.  நமது இந்திய கிராமத் தலைவர்கள்  மற்றும்  நகராட்சி  உறுப்பினர்கள்  தனித்து வாழும் தாய்மார்களின் பதிவில்  உதவலாம்.

"கிஸ் ஜ.டி." எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்தின் கீழ் மேலும் அதிகமானோர் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக அந்த  திட்டம் ஒருமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 5,000 கோட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில் கடந்த அக்டோபர் மாதம் வரை 1,661 பேர் மட்டுமே உதவி பெற்றுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

உதவி பெறத் தகுதியுள்ள நிறைய பேர் வெளியில் உள்ளனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் உண்மையில் தனித்து வாழும் தாய்மார் என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில் வருமானம் மற்றும் குடும்ப நிலை தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் அவர்கள் சமர்பிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

அடுத்தாண்டில் இத்திட்டம் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் (பிங்காஸ்) என்ற பெயரில் தரம் உயர்த்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். மாநில சட்டமன்றத்தில் இனறு இத்திட்டத்தில் குறைவான பங்கேற்பு  குறித்து பத்தாங் காலி உறுப்பினர் ஹருமாய்னி ஓமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரில் நகர்ப்புற ஏழ்மை மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் குறித்த கேள்விக்கு, சமூகநல இலாகாவின் வசம் இதன் தொடர்பான இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.