ECONOMY

வெள்ளம்: கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலை பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டன

20 டிசம்பர் 2021, 6:36 AM
வெள்ளம்: கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலை பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டன

கோலாலம்பூர், டிசம்பர் 20- சிலாங்கூர் ஷா ஆலமில் பல பகுதிகளை வெள்ளம் பாதித்ததால் மூடப்பட்ட கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலையின் (LKSA) கிலோமீட்டர் 4.1 இல் இரு திசைகளிலும் உள்ள சாலைகள் இன்று காலை 5.39 மணி முதல் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நெடுஞ்சாலை பராமரிப்பாளராக இருக்கும் Projek Lintasan Shah Alam Sdn Bhd, ஜூப்லி பேராக் வட்டத்திலிருந்து  செக்சன் 23, அப்டவுன் ஷா ஆலம் மற்றும் கோத்தா கெமுனிங் செல்லும் பிரதான சாலையை நோக்கிச் செல்லும் புற சாலை இன்னும் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தது. "சாலை துப்புரவு பணிகள் முடிந்தவுடன் மட்டுமே சாலைகள் மீண்டும் திறக்கப்படும்,.

மேலும் அவை அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதுகாப்பானவை" என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யும் முயற்சியில், ரோந்துக் குழு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சாலையைப் பயன்படுத்துவோர் அங்கு பணியில் இருக்கும் அதிகாரிகளின் அனைத்து எச்சரிக்கை அறிகுறி, அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.

டிஜிட்டல் மாறி செய்தியிடல் அமைப்பு (VMS), LKSA @LKSAtrafik Twitter  சமூக ஊடக தளம் மற்றும் PROLINTAS நெடுஞ்சாலை Facebook பக்கம் அல்லது 1-3008-82801 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்தின் நிலை குறித்த அறிவிப்புகளைப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.