ஷா ஆலம், டிச 12- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்பவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் இதுவரை 6,000 பேர் வரை தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கிளினிக் செல்கேர் தலைமை நிர்வாகி டாக்டர் ஜீவராஜா கூறினார்.
அவர்களில் பெரும்பாலோர் சினோவேக் தடுப்பூசியை விரும்புகின்றனர். சிலர் யைசெஜாத்ரா வழி பெறப்பட்ட வருகைக்கான முன்பதிவை ரத்து செய்துவிட்டு சினோவேக் தடுப்பூசியைப் பெறுவதற்காக கோலாலம்பூரில் உள்ள செல்கேர் கிளினிக்கு வருகின்றனர் என்றார் அவர்.
இத்திட்டத்திற்கு இதுவரை நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. எனினும், முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே இங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மேலும் அதிகமானோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில மக்கள் பயன்பெறுவதற்காக ஏதுவாக செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு 157,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்டுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அமிருடின் ஷாரி இம்மாதம் 7 ஆம் தேதி கூறியிருந்தார்.
ECONOMY
செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தில் அதிக மூத்த குடிமக்கள் பங்கேற்பு-டாக்டர் ஜீவராஜா தகவல்
12 டிசம்பர் 2021, 6:26 AM


