ECONOMY

இன விவகாரங்களைக் கைவிடுவீர்- பொதுமக்களுக்கு சிலாங்கூர் சுல்தான் நினைவுறுத்து

11 டிசம்பர் 2021, 11:41 AM
இன விவகாரங்களைக் கைவிடுவீர்- பொதுமக்களுக்கு சிலாங்கூர் சுல்தான் நினைவுறுத்து

ஷா ஆலம் டிச 11- உணவுர்களைத் துண்டிக்கூடிய இன விவகாரங்களை எழுப்புவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன விவகாரங்களை விட அதிமுக்கியத்துவம் தரக்கூடிய இதர விஷயங்கள் நிறைய உள்ளதாக அவர் சொன்னார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனைத்து இனங்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வேலை இழப்பு, வர்த்தக பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இன வேறுபாடின்றி பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தினர் இந்த கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது நாம் அனைவரும் ஒரே கப்பலில் இருக்கிறோம். பொருளாதாரமும் கோவிட்-19 பெருந்தொற்றும் நமக்கு அச்சமூட்டும் விஷயங்களாக உள்ளன என்றார் அவர்.

இன பதற்றத்தைக் ஏற்படுத்தக்கூடிய எந்த விஷயத்தையும் தயவு செய்து எழுப்ப வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என தி ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சையில் ஈடுபடும் தரப்பினர் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

நீங்கள் சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதில் கவனமாக இருங்கள். சிறிய விஷயங்களப் பெரிதுபடுத்த வேண்டாம். பெரும்பாலான மலேசியர்கள் நல்லவர்களாகவும் நியாயமான முறையில் சிந்திக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.