ஷா ஆலம், டிச 6- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு ஏற்பாடு செய்த இலவச பரிசோதனைத் திட்டத்தின் வழி 177,000 த்திற்கும் மேற்பட்டோர் பலனடைந்நதனர்.அதே சமயம், கோவிட்-19 நோயாளிகளின் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 60,000 சுயப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்காக மற்ற மாநிலங்கள் காத்திருந்த வேளையில் நாம் சொந்தமாக பரிசோதனையை மேற்கொண்டோம். மற்ற மாநிலங்கள் தடுப்பூசிக்காக காத்திருந்த வேளையில் மாநில மக்கள் விரைவாக தடுப்பூசி பெறுவதற்காக சொந்தமாக தடுப்பூசி வாங்கினோம் என்றார் அவர்.
கடந்த ஈராண்டுகளில் சொந்த வழிமுறையை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். இது, அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்வில் உரையாற்றியபோது அவர் சொன்னார்.
ECONOMY
சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை வழி 177,000 பயனடைந்தனர்
6 டிசம்பர் 2021, 5:45 AM


