மாராங், டிச 5- கோவிட்-29 நோய்த் தொற்று கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கியது முதல் இதுவரை மொத்தம் 23,766 காவல்துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 1,794 உயர் போலீஸ் அதிகாரிகள், 10,577 இளநிலை போலீஸ் அதிகாரிகள், 1,137 அரசு ஊழியர்கள் மற்றும் 10,258 குடும்ப உறுப்பினர்கள் நோயினால் பாதிக்கப்பட்டதாக துணைப் போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் கூறின்ர்.
"இந்நோயினால் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் மொத்தம் 39 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு உயர் அதிகாரிகள் மற்றும் 35 இளநிலை அதிகாரிகளும் அடங்குவர். இது தவிர, 118 போலீஸ்காரர்களின் குடும்ப உறுப்பினர்களும் மூன்று சிவில் அதிகாரிகள் என்று மரணமடைந்தனர் அவர் சொன்னார்.
இன்று, இங்கு வாகாப் தபாயில் நடைபெற்ற திரங்கானு மாநில போலீஸ் தலைமையகத்திடம் டோயோட்டா ஹைலக்ஸ் சரக்கு வாகன ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் பயன்பாட்டிற்காக 26 நான்கு சக்கர சரக்கு வாகனங்களை மஸ்லான் ஒப்படைத்தார்.
இதனிடையே, 65 அதிகாரிகள், 190 உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய மொத்தம் 32 குழுக்கள் திரங்கானுவில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
ECONOMY
23,766 காவல் துறையினர்,குடும்ப உறுப்பினர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு
5 டிசம்பர் 2021, 10:39 AM


