ECONOMY

44,484 பேருக்கு தாவாஸ் திட்டத்தின் கீழ் உதவி

4 டிசம்பர் 2021, 10:40 AM
44,484 பேருக்கு தாவாஸ் திட்டத்தின் கீழ் உதவி

கோம்பாக், டிச 4- சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய நிதித் திட்டத்தின் (தாவாஸ்)  44,484 உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டு பள்ளித் தவணைக்கு தேவையான எழுது பொருள்கள் மற்றும் உபகரணங்கள்  வழங்கப்படுகின்றன.

2015 இல் பிறந்த பிள்ளைகளுக்கு  50 வெள்ளி மதிப்புள்ள புத்தகப் பைகள், எழுதுபொருட்கள், உணவுப் கலங்கள், பான போத்தல்கள், முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினி திரவம் ஆகியவை வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில சட்ட மன்ற தொகுதி சேவை மையத்தின்  மூலமாக  விநியோகம் இன்று தொடங்கி மாத இறுதி வரை இப்பொருள்களை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தொகுதி சேவை மையம் பெற்றோர்களைக் கேட்டுக் கொள்ளும். அல்லது பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்  உபகரணங்களை வழங்கும் நிகழ்வை அது ஏற்பாடு   என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் தாங்கள் பங்கேற்றுள்ளதை உறுதி செய்ய தொகுதி சேவை மையம் அல்லது யாவாஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி மத்திரி புசார் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

சுங்கை துவா தொகுதியில் யாவாஸ் திட்டத்தில் பதிவு  பெற்றவர்களுக்கு உதவிப் பொருள்களை இங்குள்ள பத்து கேவ்ஸ் டேவான் ராக்யாட் பொது மண்டபத்தில் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுங்கை துவா தொகுதியில் மொத்தம் 2,157 ணாவாஸ் உறுப்பினர்கள் உதவியைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உதவிப் பொருள் வழங்கும் பணி இங்கு கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்.

கட்டங்களாக விநியோகிக்கப்பட்டது.

தாவாஸ் உறுப்பினர்களின்  சுமையைக் குறைப்பதில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த வருடாந்திர உதவித் திட்டம் புலப்படுத்தும் வகையில் உள்ளது என்று சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.