ஷா ஆலம்,டிச 3;- டுசுன் துவா தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக மாநில அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 49 லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளது.ஆறுகளை தூய்மைப்படுத்துவது, பராமரிப்பது மற்றும் கரைகளை வலுப்படுத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்நிதி பயன்படுத்தப்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 485,694 வெள்ளி மதிப்பில் 21 திட்டங்களும் 2019 ஆம் ஆண்டில் 11 லட்சம் வெள்ளி செலவில் 23 திட்டங்களும் யேற்கொள்ளப்பட்டன.
கடந்தாண்டு 18 வெள்ளி மதிப்பிலான 43 திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட வேளையில் இவ்வாண்டு 15 லட்சம் வெள்ளி செலவில் 30 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்றார் அவர்.
டுசுன் துவா தொகுதியில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து மாநில சட்டமன்றத்தில் இன்று தொகுதி உறுப்பினர் எட்ரி பைசால் எடி எழுப்பிய கேள்விக்கு இஷாம் இவ்வாறு பதிலளித்தார்.
ALAM SEKITAR & CUACA
டுசுன் துவா தொகுதியில் 49 லட்சம் வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்
3 டிசம்பர் 2021, 7:08 AM


