ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் சதுப்பு நிலப் பாதுகாப்புக்கு வெ.250,000 ஒதுக்கீடு

2 டிசம்பர் 2021, 4:43 AM
சிலாங்கூரில் சதுப்பு நிலப் பாதுகாப்புக்கு வெ.250,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 2 - சிலாங்கூரில் சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக இவ்வாண்டு 232,050  வெள்ளி செலவிடப்பட்டது.

இந்த நிதி மாநில மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் இருந்து பெறப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மொத்தம் 150,000  வெள்ளி சிலாங்கூர் அரசாங்கத்தின் மாநில மேம்பாட்டு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்டது. மேலும், 82,050 வெள்ளி மத்திய அரசின் மேம்பாட்டு நிதியிலிருது பெறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

புலாவ் தெங்காக் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இரண்டு ஹெக்டர் பரப்பளவில் சதுப்பு நில மரங்களை நடுதல், தெலுக் கெடோங் வனக் காப்பகத்தில் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநில தாவர வகைகளை பராமரிப்பது மற்றும் ஒரு ஏக்கரில் சதுப்புநில மரங்களை நடுதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 

 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கரையோரத்தில் உள்ள மோசமடைந்த பகுதிகளில் சதுப்புநில மரங்களை நடுவதற்கும் கரைகள் மற்றும் ஆறுகளில் அமைந்துள்ள  சதுப்பு நில தாவர வகைகளை பராமரிப்பதற்கும் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுடனும் மாநில அரசு ஒத்துழைப்பு நல்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில்  ஒவ்வொரு ஆண்டும் கடற்கரைகள் உட்பட மாநிலம் முழுவதும் மரங்களை நடும் பிரச்சாரத்தை மாநில அரசு நடத்துகிறது சிலாங்கூரில் சதுப்புநில பாதுகாப்பு, மறுசீரமைப்புக்காக மாநில அரசு சுமார் இரண்டரை லட்சம் வெள்ளியைச்  செலவிடப்பட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.