ஷா ஆலம், டிச 2- பொதுமக்கள் மதிப்பீட்டு வரி, வீட்டு வரி மற்றும் அபராதத் தொகையை சரிபார்த்து செலுத்துவதற்கு ஏதுவாக வார இறுதியில் நடமாடும் முகப்பிடச் சேவையை இரு ஊராட்சி மன்றங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான் இந்த நடமாடும் முகப்பிடச் சேவை வரும் சனிக்கிழமை செக்சன் 9, பிளாசா ஷா ஆலமில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
காஜாங் நகராண்மைக்கழகம் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சவுஜானா இம்பியான், டேவான் ஸ்ரீ செம்பாக்காவில் இச்சேவையை நடத்துகிறது.
ஷா ஆலமில் நடைபெறும் இந்த முகப்பிடச் சேவையில் வாகன நிறுத்துமிட அபராதத் தொகை 10 வெள்ளி வரை குறைப்பு மற்றும் ஊராட்சி மன்ற துணைச் சட்டங்களின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 70 விழுக்காடு வரை கழிவு வழங்குவது ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.


