ஷா ஆலம், டிச 2- பூச்சோங் மற்றும் கின்ராரா பகுதி மக்கள் பூச்சோங் ஜெயா, ஜாலான் பெலாத்துக்கில் உள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்தில் இன்று தொடங்கி ஊக்கத் தடுப்பூசியைப் பெறலாம்.
ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்பும் சுற்று வட்டார மக்களின் வசதிக்காக இந்த தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கின்ராரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இம்முறை ஊக்கத் தடுப்பூசி (பைசர்) செலுத்தும் இயக்கம் பூச்சோங் ஜெயா, ஜாலான் பெலாத்துக்கில் உள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்தில் இன்று தொடங்கி வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்புவோர் வருகைக்கான முன்பதிவை பெறுவதற்காக ரேச்சல் என்பவருடன் 019-6636296 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி இயக்கம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.


