ஷா ஆலம், நவ, 25- சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள #Selangor2022 வரவு செலவுத் திட்டம் கோவிட்-19 நோய்ப் பரவலுக்கு பிந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் வலியுறுத்தப்படும் அம்சங்களில் வருமானத்தை பெருக்குவது மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அதிகரிப்பது ஆகியவையும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.
இந்த படஜெட் தாக்கல் மந்திரி புசார் முகநூல் மற்றும் டிவி சிலாங்கூர் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை சிலாங்கூர் கினி, மாண்டரின், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று பதிப்புகள் மூலம் படிக்கலாம் .
பட்ஜெட்டின் முக்கிய உள்ளடக்கம் மற்றும் விரிவான தகவல் செய்திகளாகவும் விளக்கப் படமாகவும் வெள்ளிக்கிழமை மாலை சிலாங்கூர் மீடியாவின் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும். சிலாங்கூர் பட்ஜெட் 2022 தொடர்பான செய்திகள் அடங்கிய சிலாங்கூர் கினி அச்சு பதிப்பு மற்றும் நவம்பர் 27 ஆம் தேதி விநியோகம் செய்யப்படும்.


