ஷா ஆலம், நவ 18 - இம்மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு மாநில மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளின் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
வெள்ளம், திடீர் வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அப்பிரிவு அறிக்கையில் ஓன்றில் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை உள்ளடக்கிய மழைப்பொழிவு குறித்த மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (சிலாங்கூர்) அறிக்கையையும் பேரிடர் மேலாண்மை பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் சராசரி மழை அளவு 250 மில்லி மீட்டர் முதல் 370 மில்லி மீட்டர் வரை இருக்கும். டிசம்பர் (200 மிமீ - 300 மி.மீ), ஜனவரி 2022 (150 மி.மீ - 230 மி.மீ), பிப்ரவரி 2022 (140 மி.மீ - 210 மி.மீ) மற்றும் மார்ச் 2022 (200 மி.மீ - 300 மி.மீ) ஆகும்.
சிலாங்கூர் தவிர, கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களிலும் இம்மாதம் முதல் ஜனவரி 2022 தொடக்கம் வரையிலும் சரவா மற்றும் சபாவில் 2022 ஜனவரி தொடக்கத்திலும் பிப்ரவரியிலும் கனமழை பெய்யும்.
மாவட்ட வாரியாக (சிலாங்கூர்) வெள்ள அபாயப் பகுதிகள்
ALAM SEKITAR & CUACA
பருவமழை மாற்றத்தினால் சிலாங்கூரில் வெள்ள அபாயம்
18 நவம்பர் 2021, 4:49 AM


