MEDIA STATEMENT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 700 ஊழியர்கள் ஊழலுக்கு எதிராக உறுதி மொழி

16 நவம்பர் 2021, 8:57 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 700 ஊழியர்கள் ஊழலுக்கு எதிராக உறுதி மொழி

ஷா ஆலம், நவ 16- இன்று அனுசரிக்கப்படும் உயர் நெறி தினத்தை முன்னிட்டு இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. வில் நடைபெற்ற நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 700 ஊழியர்களும் ஊழலுக்கு எதிராக ப உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாத மற்றும் ஊழலில் ஈடுபடாத அரசு ஊழியர்களை உருவாக்கும் நோக்கில் இந்த உறுதி மொழிச் சடங்கு நடத்தப்பட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

ஒவ்வொருவரின் வாழ்வியல் அங்கமாக விளங்கும் பணி நெறி மற்றும் உயர் நெறியை மாநகர் மன்ற ஊழியர்கள் தொடர்ந்து கட்டிக் காத்து வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உயர் நெறி எப்போதும் என் இதயத்தில்“ எனும் தலைப்பிலான இந்நிகழ்வை தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊழல் தடுப்பூ ஆணையத்தின் சிலாங்கூர் மாநில இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் “ஊழல் இடர் நிர்வாகம்“ மற்றும் “கட்டொழுங்கு நிர்வாக வழிகாட்டி“ ஆகிய இரு புத்தகங்களையும் டத்தோ பண்டார் வெளியிட்டார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம் அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஒழித்து உயர் நெறியை அமல்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இந்த புத்தக வெளியீடு விளங்குவதாக டத்தோ பண்டார் கூறினார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.