ECONOMY

நிலையான நகர விருதை காஜாங் நகராண்மைக் கழகம் பெற்றது

10 நவம்பர் 2021, 5:47 AM
நிலையான நகர விருதை காஜாங் நகராண்மைக் கழகம் பெற்றது

ஷா ஆலம், நவ 10- வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சினால் நடத்தப்பட்ட நகராண்மைக் கழக நிலையிலான 2021 ஆம் ஆண்டு நிலையான நகர விருதை காஜாங் நகராண்மைக் கழகம் தட்டிச் சென்றது.

அதே பிரிவில் மூன்றாம் பரிசை செலாயாங் நகராண்மைக் கழகம் வென்ற வேளையில் மாநகர் மன்றங்களுக்கான பிரிவில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மூன்றாம் பரிசை பெற்றது.

இதனிடையே, மாவட்ட மன்றங்களுக்கான பிரிவில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றங்களுக்கு வெற்றிக் கோப்பை, நற்சான்றிதழ், வெ.3,000 முதல் வெ 8.000 வரையிலான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் மூர்னினெட்ஸ் எனப்படும் புறநகர்ப் பகுதிக்கான குறியீட்டு ஒருங்கமைப்பு திட்டங்களை சீரான முறையில் மேற்கொண்டு வரும் காரணத்திற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு 2021 ஆம் ஆண்டு சிறப்பு நிலையான நகர விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றமைக்காக அந்த மாநகர் மன்றத்திற்கு வெற்றிக் கோப்பை, வெ.6.000 ரொக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீடித்த மேம்பாட்டு அடைவு நிலைக்கான ஆறுதல் பரிசை புத்ரா ஜெயா நகராண்மைக் கழகமும் பெக்கான் மாவட்ட மன்றமும் பெற்றன.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.