சிப்பாங், 7 நவ: மருத்துவ மற்றும் கல்விக்கூடங்களில் உதவிகள் வழங்க கவுன்சில் உறுப்பினர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள், இது நோய்தொற்று காலங்களில் வருமானத்தை இழந்து சிரமப்படும் மக்களின் சுமையை குறைக்க உதவும் என்று ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
மாண்புமிகு இங் பள்ளி அமர்வு ஏற்கனவே தொடங்கியுள்ளதாலும், உணவு கூடைகளுக்கான தேவை குறைந்துள்ளதாலும் பொது மக்களுக்கு உதவுவதற்கான நமது முயற்சிகள், தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றார்.
“தேசிய மீட்சித் திட்டத்தின் (பிபிஎன்) நான்காம் கட்டத்திற்கு சிலாங்கூர் நகர்ந்துள்ளது, மேலும் பலர் பணிக்குத் திரும்பியுள்ளனர். அதனால் உணவு கூடைகளுக்கான தேவை குறைந்துள்ளது. "இப்போது மருத்துவ மற்றும் பள்ளி உபகரணங்கள் ஆகியவை வழங்கி உதவுவது, குடும்ப செலவுகளின் சுமையைக் குறைப்பதற்கு உதவும் முக்கியமான ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.
இன்று சிப்பாங் நகர சபையின் கோத்தா வாரிசான் பிரிவு குடியிருப்போர் பிரதிநிதிகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட '' மீண்டும் பள்ளிக்கு திரும்புவோம் ஜோம் கெம்பாலி கே செகோலா'' நிகழ்ச்சியில் அவர் மக்களை சந்தித்தார்.
விழாவின் போது, ஏழு ஒராங் அஸ்லி குழந்தைகள் உட்பட மொத்தம் 100 மாணவர்கள், RM10,000 ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வவுச்சர்கள், அறிவியல் கால்குலேட்டர்கள் மற்றும் ஜியோமெட்ரி செட்களைப் பெற்றனர்.
இதற்கிடையில், அப்பகுதிக்கான கவுன்சிலர் கன் சீ ஹுய் அடுத்த ஆண்டு பள்ளி அமர்வு வரை இது போன்ற உதவிகள் தொடரும் என்று கூறினார். "இந்த உதவியை தேவையான ஒன்றாக நாங்கள் பார்க்கிறோம். பள்ளி மற்றும் சுற்றுவட்டார மக்களிடமிருந்து கோரிக்கை இருந்தால், அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்று அவர் கூறினார்.


