ECONOMY

சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை, நாளை கோலாக்குபூ பாரு டேவான் மெர்டேக்காவில்

5 நவம்பர் 2021, 9:46 AM
சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை, நாளை கோலாக்குபூ பாரு டேவான் மெர்டேக்காவில்

ஷா ஆலம், 5 நவம்பர்:  சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை, நாளை கோலாக்குபூ பாரு டேவான் மெர்டேக்கா உலு சிலாங்கூரில் நடைபெற உள்ளது, அதில் http://www.selangorbekerja.com.my என்ற இணைப்பின் மூலம் இணைக்கலாம்.

அடுத்த சுற்றுப்பயணத் தொடர் நவம்பர் 20 அன்று டேவான் மெராந்தி, பாயா ஜாரஸ், ​​பெட்டாலிங்கில் நடைபெறுகிறது. முன்னதாக, ஷா ஆலம் மற்றும் கோலா சிலாங்கூரில் அக்டோபர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை, இளம் தலைமுறைக்கான மற்றும் மனித மூலதனம் ஆகிய வற்றுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் கைருடின் ஓத்மான், இரண்டு தொடர் திட்டங்களில் மொத்தம் 239 நபர்கள் பணியாற்ற ஏற்றுக் கொள்ளப் பட்டதாகக் கூறினார்.

சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை Jelajah Selangor Berkerja பட்டதாரிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் வேலையிழந்த தனிநபர்கள் ஆகியோர் திட்டத்தில் பங்கேற்க இலக்கு வைத்துள்ளனர்.

நவம்பர் 27 வரை ஆறு தொடர் சுற்றுப்பயணங்கள் மூலம் 25,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படு மென எதிர்பார்க்கப் படுவதாக  கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.