ECONOMY

திட கழிவு நிறுவனம் எச்சரிக்கை - விதிகளை மீறினால், ஒப்பந்தம் காலாவதியாகிவிடும்

5 நவம்பர் 2021, 7:46 AM
திட கழிவு நிறுவனம்  எச்சரிக்கை - விதிகளை மீறினால், ஒப்பந்தம் காலாவதியாகிவிடும்

ஷா ஆலம், 5 நவ: கடந்த புதன்கிழமை டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், லாரி ஓட்டுநரின் அலட்சிய போக்கால்  'பறக்கும்' கேன்வாஸ் சம்பவத்தில் தொடர்புடைய துணை ஒப்பந்த நிறுவனம் மீது KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

நடைவிறை விதிகளை (எஸ்ஓபி) பின்பற்றத் தவறினால், நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் ராம்லி முகமது தாஹிர் தெரிவித்தார்.

KDEBWM செயல்பாட்டு இணக்க விதி முறைகளுக்கு ஏற்பவும் மக்களின் தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கடமையாற்றும், சிலாங்கூரில் திடக்கழிவு மேலாண்மை சேவைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அக்கறையை அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

“எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, சேவையானது SOP இன் படி இருப்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரம்லி, தனது நிறுவனத்திற்கு சொந்தமான குப்பை லாரி மற்றும் ஓட்டுநர் இழைத்த தவறால், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து புகாரளித்த பயனிட்டாளருக்கு தனது தரப்பு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, லோரி மேல் மூடப்பட்டிருந்த கேன்வாஸ் படுதா அவிழ்ந்து காற்றில் பறந்து ஒரு மோட்டார் சைக்கிளோட்டியின் பார்வையை மறைத்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

KDEBWM இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் ரம்லி விளக்கினார், மேலும் அவர்கள் நாளை சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய

அறிவுறுத்தப் பட்டனர்.

" அந்த விபத்தினால் ஏற்பட்ட அனைத்து மருத்துவ மற்றும் வாகன பழுது பார்ப்பு சேதங்களும் தீர்க்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.