கிள்ளான், அக் 31- இங்கு இங்கு நடைபெற்ற இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கு கொண்டவர்களுக்கு பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 1,000 கோவிட்-10 சுயப் பரிசோதனைக் கருவிகளையும் 4,000 முகக் கவசங்களையும் வழங்கினார்.
தடுப்பூசிக்கு பெறுவதற்காக வந்தமைக்காக நன்றி கூறும் வகையில் 12 முதல் 17 வயது வரையிலான அந்த இளையோருக்கு இப்பொருள்கள் வழங்கப்பட்டதாக லியோங் தக் லீ கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் தடுக்கும் விதமாகவும் இந்த சுயப் பரிசோதனைக் கருவிகளும் முகக் கவசங்களும் வழங்கப்பட்டன என்றார் அவர்.
இங்குள்ள பண்டமாரான் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற பண்டமாரான் தொகுதி நிலையிலான இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்திற்கு 1,000 தடுப்பூசிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதோடு காலை 8.00 மணி முதல் மண்டபத்தின் வெளியே அவர்கள் காத்திருந்தனர் என்றார்.
காலை 11.00 மணியளவில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மேலும 200 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சினோவேக் தடுப்பூசிகளைச் செலுத்த விரும்புகின்றனர். பக்கவிளைவுகள் குறைவாக உள்ளதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.


