ஷா ஆலம், அக் 31- பண்டார் உத்தாமா மற்றும் ஸ்ரீ செர்டாங் ஆகிய தொகுதிகளில் வரும் நவம்பர் மாதம் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் நடைபெறவுள்ளது.
வரும் நவம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் காலை மணி 9.00 முதல் மாலை மணி 5.00 வரை இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும் என்று செலங்கா கூறியது.இன்னும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு நற்செய்தி. நீங்கள் பங்கு கொள்வதற்கு ஏதுவாக மேலும் இரு தடுப்பூசி இயக்கங்ள் நடத்தப்படுகின்றன என்று அது தெரிவித்தது.
வரும் 6 ஆம் தேதி பண்டார் உத்தாமா, பியு3 சமூக மண்டபத்திலும் 7 ஆம் தேதி ஸ்ரீ செர்டாங் உள்ளரங்கிலும் இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும்.
இந்த தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு 150,000 தடுப்பூசிகளை ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்


