ANTARABANGSA

பி.டி.பி.டி.என். கடனை தள்ளுபடியுடன் திரும்ப செலுத்த ஏற்பாடு

31 அக்டோபர் 2021, 4:35 AM
பி.டி.பி.டி.என். கடனை தள்ளுபடியுடன் திரும்ப செலுத்த ஏற்பாடு

கோலாலம்பூர், அக் 31-  தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகத்தின்  கடனை (PTPTN) நவம்பர் 1 முதல் தேதி தொடங்கி தள்ளுபடியுடன் திரும்பச் செலுத்துவதற்கு பல்வேறு வழி முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளத்திலிருந்து  கடன் தொகையை பிடித்தம் செய்ய அனுமதிக்க விரும்புவோர்  https://www.ptptn.gov.my/cutgajionline/ என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அக்கடனுதவிக் கழகம் அறிக்கை ஓன்றில் கூறியது.

அதே சமயம் கடனுக்கான தவணைப் பணத்தை நேரடியாக பற்று வைக்க விரும்புவோர்  https:/  www.ptptn.gov.my/direct_debit/direct_debit.html. என்ற அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அது கூறியது.

கடன் பெற்றவர்களின் கணக்குகள் ஓவ்வொரு மாத இறுதியிலும் மேம்படுத்தப்படும் என்பதோடு

கடன் வாங்கியவர் அடுத்த  மாதத்தின் மதல் வாரத்தில் அதன் தொடர்பான அறிக்கையைப் பெறலாம் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தொகையை முழுமையாக அல்லது 50 விழுக்காட்டை ஓரே தடவையில் செலுத்த விரும்புவோர் www.ptptn.gov.my அகப்பக்கம் வாயிலாக சந்தை  நிர்வாகி மூலம்  வேண்டும். நவம்பர் 1 ஆம் தேதிக்குள் உறுதிபடுத்திக் கொள்ள வேணடும்

பி.டி.பி.என். கடன் பெற்றவர்கள் கடனைத் திரும்பச் செலுத்துவததற்கு நவம்பர் முதல் தேதி தொடங்கி ஏப்ரல் வரை கழிவு வழங்கப்படுவதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.