கோலாலம்பூர், அக் 31- அடுத்தாண்டில் ஜோகூர் மாநிலத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த சுக்மா விளையாட்டு போட்டியை வரும் 2024 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்க சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான சுக்மா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுக்மா போட்டி ஏற்பாடுகள் குறித்த ஆகக் கடைசி அறிக்கையை பரிசீலிப்பதற்காக நடத்தப்பட்ட சுக்மா நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசா அசுமு இந்த முடிவை அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டிற்கான சுக்மா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுக்மா போட்டியை கோலாலம்பூரில் நடத்துவதற்கும் தேசிய விளையாட்டு மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு போட்டிகளையும் நடத்துவதற்கான தேதியை தேசிய விளையாட்டு மன்றம் பரிந்துரைக்கும். சுக்மா நிர்வாக்குழுவின் அடுத்த கூட்டத்தில் அந்த தேதியை ஏற்றுக் கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.


