ECONOMY

சுபாங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக    ஓட்டப் பந்தயம்

27 அக்டோபர் 2021, 10:08 AM
சுபாங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக    ஓட்டப் பந்தயம்

ஷா ஆலம், 27 அக்- சுபாங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் வரும் டிசம்பர் 1 முதல் 25 ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

 

21 கிலோமீட்டர் தூரம் கொண்ட  அரை மராத்தான் மற்றும் 42  கிலோமீட்டர் தூரம் கொண்ட மராத்தான் என இரண்டு வகை பந்தயங்கள் நடைபெறவிருப்பதாக டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

 

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் இந்த போட்டியில் சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள் பங்கேற்க அழைக்கிறோம். இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதற்குரிய வாய்ப்பினை பொது மக்கள் பெற முடியும் என்று அவ்ர சொன்னார்.

 

பங்கேற்பாளர்கள் இடம் மற்றும் பந்தயத் தடத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கலாம். மேலும் அவர்கள் தங்களின் முழு விபரங்களை கார்மின், ஸ்ட்ராவா, ஸ்விஃப்ட், நைக் +, ரன்கீப்பர் போன்ற இயங்கு தளங்களைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 முகநூலில் இன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்ட சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முழு அளவிலான கூட்டத்திற்கு தலைமையேற்று உரை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்..

 

இந்த போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 45 வெள்ளி கட்டணம் செலுத்தி நவம்பர் 20  முதல் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.

 

சட்டைகள், பதக்கங்கள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள் பங்கேற்பாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். மேலும், மின்-சான்றிதழ்கள் மற்றும் மின்- புகைப்படச் சட்டங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்படும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.