ECONOMY

80 கிலோ மீட்டர் நீள சைக்கிள் தடம்- ஷா ஆலமில் அமைக்கப்படும்

23 அக்டோபர் 2021, 8:13 AM
80 கிலோ மீட்டர் நீள சைக்கிள் தடம்- ஷா ஆலமில் அமைக்கப்படும்

ஷா ஆலம், அக் 23- எண்பது கிலோமீட்டர் நீளத்திற்கு சைக்கிள் தடத்தை அமைக்க  ஷா ஆலம் மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது. விளையாட்டு நகராக ஷா ஆலமை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மாநகரின் மையப் பகுதி மற்றும் செக்சன் 7 ஆகியவற்றில் 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு சைக்கிள் தடம் அமைக்கப்பட்டுள்ளதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

எஞ்சிய 50 கிலோ மீட்டர் சைக்கிள் தடம் செக்சன் 13, 18,20 மற்றும் செக்சன் 24 இல் அமைக்கப்பட்டு நடப்பிலுள்ள செக்சன் 2, 5 மற்றும் 7 இல் உள்ள தடங்களுடன் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் நீடித்த மேம்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது, அதேவேளையில் ஷா ஆலமை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நகராக உருவாக்கும் இலக்கையும் இதன் மூலம் அடைவதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2021 விளையாட்டு தினத்தை முன்னிட்டு இங்குள்ள கோத்தா கெமுனிங் எம்.பி.எஸ்.ஏ. அலுவலக வளாகத்தில் சைக்கிளோட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் அதிகமான ஏரிகளையும் பொதுழுது போக்கு பூங்காக்களையும் கொண்டுள்ளதால் இதனை விளையாட்டு மையமாக பிரகடனப்படுத்துவது பொருத்தமனதாக இருக்கும் என்று அவர்  சொன்னார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.