ECONOMY

மலேசியாவின் சர்வதேச வாணிக மேம்பாட்டுக்கு உதவ எஸ்ஐபிஎஸ் 2021க்கு சிலாங்கூர் முதலீடு RM11 மில்லியனை ஒதுக்குகிறது

17 அக்டோபர் 2021, 2:54 PM
மலேசியாவின் சர்வதேச வாணிக மேம்பாட்டுக்கு உதவ எஸ்ஐபிஎஸ் 2021க்கு சிலாங்கூர் முதலீடு RM11 மில்லியனை ஒதுக்குகிறது

ஷா ஆலம், அக்டோபர் 17 - சிலாங்கூர் மாநில அரசின் முதலீட்டு பிரிவான இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹட்,  சிலாங்கூர் சர்வதேச வணிக உச்ச மாநாடு 2021 (SIBS 2021) இன் முழு வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்காக RM11 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது - மெய்நிகர் வழியாக தொடங்க உள்ளது. நவம்பர் 18-21 க்குள் நடைபெறவுள்ளது. எஸ்ஐபிஎஸ் 2021 ன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசான் அசாரி இட்ரிஸ், ஒன்பது முக்கிய நிகழ்வுகளை கொண்ட சந்தைப்படுத்தல், மேம்பாடு மற்றும் வணிக போர்ட்டலின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஒதுக்கீடு அடங்கி உள்ளது என்றார்.

இந்த ஆண்டு எஸ்ஐபிஎஸ்ஸை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம், நமது தொழில் முனைவோர் மற்றும் வணிக சமூகம் சுமார் ஒன்றரை வருட நடமாட கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பிறகு தங்கள் வணிக மற்றும் நெட்வொர்க்கிங் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உதவுவதாகும்.

"சிலாங்கூர் எப்போதும் மலேசியாவின் பொருளாதாரத்தின் இயந்திரமாக கருதப்படுவதால், வணிகர்களுக்கு  வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் எங்கள் பங்கை ஆற்ற நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்" என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த ஒதுக்கீடு விளம்பரம் மற்றும் மேம்படுத்தல், போல்ரூம் வாடகை, மாநாடு மற்றும் கண்காட்சி அரங்குகள் மற்றும் பிறவற்றையும் உள்ளடக்கியது என்று ஹசன் அசாரி கூறினார். பிராந்திய வணிக உச்சிமாநாடு ஐந்து வெவ்வேறு சிறப்புகளுடன் ஐந்து வெவ்வேறு கண்காட்சிகளை நடத்துவதற்கும், இந்த கண்காட்சிகளுக்காக மொத்தம் 500 கண்காட்சியாளர்களை இன்வெஸ்ட் சிலாங்கூர் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

கூடுதலாக, இன்வெஸ்ட் சிலாங்கூர் மூன்று சர்வதேச மாநாடுகளையும் கொண்டிருக்கும் என்றும் ஒவ்வொன்றும் குறைந்தது 150 பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் தவிர, SIBS 2021 அதன் சர்வதேச சமையல்காரர் போட்டியை தொழில்முறை சமையல்காரர் சங்கம், சமையல் கல்லூரிகள் மற்றும் உயர் நிறுவனங்களின் சமையல்காரர்களின் பங்கேற்புடன் நடத்தும் என்றார்.

SIBS 2021 ஒரு மேம்பட்ட கலப்பு நிகழ்வு என்பதால், இந்த கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் www.selangorbusinesshub.my வணிக போர்ட்டலில் அவற்றின் மெய்நிகர் பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருக்கும்  என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.