ECONOMY

சித்தம்“ மூன்றாம் கட்டப் பயிற்சித் திட்டத்தில் இயந்திரவியல் துறை உள்ளடக்கப்படும்- ரோட்சியா தகவல்

16 அக்டோபர் 2021, 9:23 AM
சித்தம்“ மூன்றாம் கட்டப் பயிற்சித் திட்டத்தில் இயந்திரவியல் துறை உள்ளடக்கப்படும்- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், அக் 16- சித்தம் எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாட்டு மையத்தின் வர்த்தக வழிகாட்டி பயிற்சித் திட்டத்தின் (க்ரோ) மூன்றாம் கட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இந்த மூன்றாம் கட்டத் திட்டத்தில் இயந்திரவியல் மற்றும் ஃபோர்க்லிப்ட் எனப்படும் பளுதூக்கி பழுதுபார்ப்பு பயிற்சியும் உள்ளடக்கப்படும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

உணவு மற்றும் பான விற்பனையை மட்டுமே மையமாக கொள்ளாமல் இதர துறைகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த கூடுதல் பயிற்சிகளின் மூலம் வேலை வாய்ப்புகளையும் அதிக வருமானத்தையும் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று சொன்னார்.

நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில்  க்ரோ பயிற்சித் திட்ட பங்கேற்பாளர்கள் 30 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் வர்த்தக உபகரணங்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

புகைப்படக் கலை, உடம்பிடி மற்றும் குளிசாதன பழுதுபார்ப்புத் துறைகளில் இவர்கள் மூன்று மாத பயிற்சியைப் பெற்றனர்.

இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் சொந்தமாக நிறுவனத்தைத் தொடக்கவும் ஏற்பாட்டு ஆதரவு வழங்கிய நிறுவனங்களில் தொடர்ந்து பணிபுரியவும் ஊக்குவிக்கப்படுவதாகவும் ரோட்சியா குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட துறைகளில் அடிப்படை திறனை  பெற்றப் பின்னர் சொந்தமாக அல்லது ஏற்பாட்டு ஆதரவை வழங்கிய நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றலாம். வர்த்தகத்திற்கு தேவையான நிதி அல்லது உபரணங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்கி உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.