ECONOMY

மந்திரி புசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது, மக்கள் மீது சிலாங்கூர் அரசின் அக்கறையை புலப்படுத்துகிறது

15 அக்டோபர் 2021, 8:05 AM
மந்திரி புசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது, மக்கள் மீது சிலாங்கூர் அரசின் அக்கறையை புலப்படுத்துகிறது

பெடலிங் ஜெயா, 15, அக்டோபர்: சுங்கை சிலாங்கூர் சுத்திகரிப்பு நிலையத்தின் 1 வது கட்டத்தின் நீர் வள சொத்துக்களை மேம்படுத்தும் பணியை ஆயிர் சிலாங்கூர் மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு குடிநீர் வழங்க மந்திரி புசாருடன் சட்டமன்ற உறுப்பினர்களும் பெட்டாலிங் ஜெயா செக்சன் 17 PKNS குடியிருப்புக்கு மக்களுக்கு நீர் நிவாரணம் அளிக்க வந்தது,  அவர்களின் மக்கள் நலன் போற்றும் தன்மையைக் காட்டுகின்றது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் 1,000 லிட்டர் தண்ணீர் கொள்கலன்கள், பாட்டில்களில் குடிநீர், மற்றும் இரண்டு டேங்கர் லாரிகளைப் பெற்றதாக ருக்குன் தெத்தாங்கா (KRT) குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

"இந்த உதவி குடியிருப்பாளர்கள் மீதான மாநில அரசின் அக்கறையை காட்டுகிறது, ஏனெனில் இந்த பகுதியில் பல மூத்த குடிமக்கள் வாழ்கின்றனர்" என்று முகமது ஹசன் சே ஓமர் கூறினார்.

இன்று காலை, 500 -க்கும் மேற்பட்ட பாட்டில்கள் ஐந்து லிட்டர் குடிநீர் அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் Sdn Bhd.டின்   இந்த உதவி தனிப்பட்ட முறையில் மன  நெகிழ்ச்சியை   அளித்தது.  சட்டமன்ற  உறுப்பினருடன்  டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி,  ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமருல் ஜாமனும் கலந்துக் கொண்டனர்.

நேற்று முதல் பராமரிப்பு பணி பெட்டாலிங், கிள்ளான் / ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோலா லாங்கட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய 998 பகுதிகளில் வசிப்பவர்களை உள்ளடக்கியது.

இந்த காலகட்டத்தில், பயனர்களின் வசதிக்காக அக்டோபர் 14 முதல் 16 வரை வழங்கப்பட்ட 18 பொது நீர் குழாய்கள் தவிர மொத்தம் 105 தண்ணீர் டேங்கர்கள் இப்பகுதிகளுக்கு நீர் விநியோகம்  செய்யும் பணியில் அமர்த்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள், பொது நீர் குழாய்கள் மற்றும் உள்ளூர் நீர் நிரப்பும் நிலையங்களின் முழுமையான பட்டியலை http://hentitugas.airselangor.com என்ற இணைப்பில் காணலாம்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.