ACTIVITIES AND ADS

கோல லங்காட் போலீஸ் தலைமையகத்திற்கு 30 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன

14 அக்டோபர் 2021, 2:45 AM
கோல லங்காட் போலீஸ் தலைமையகத்திற்கு 30 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன

கோல லங்காட், அக் 14- கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு 30 குப்பைத் தொட்டிகளை கும்புலான் டாருள் ஏசான் பெர்ஹாட் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வழங்கியது.

பழுதடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக இந்த புதிய குப்பைத் தொட்டிகள் வழங்கப்படுவதாக கே.டி.இ.பி.டபள்யூ.எம். நிறுவனத்தின் நடவடிக்கைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமுது இட்ரிஸ் யூசுப் கூறினார்.

இந்த புதிய குப்பைத் தொட்டிகளை வழங்கியதன் மூலம் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையக வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணியை முறையாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ள இயலும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி, அந்த அந்த போலீஸ் நிலைய வளாகத்திற்கு புதிய தோற்றத்தையும் இது ஏற்படுத்தும் என்றார் அவர்.

இதனிடையே, இந்த குப்பைத் தொட்டிகளை வழங்கி உதவிய கும்புலான் டாருள் ஏசான் நிறுவனத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தளவாட மற்றும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹிம் எலியாஸ் கூறினார்.

எழில்மிக்க சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கேற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.