ECONOMY

தொழிலாளர்களை சோதிக்க சுயப் பரிசோதனைக் கருவிகள்- முதலாளிக்கு சொக்சோ வழங்கும்

8 அக்டோபர் 2021, 9:30 AM
தொழிலாளர்களை சோதிக்க சுயப் பரிசோதனைக் கருவிகள்- முதலாளிக்கு சொக்சோ வழங்கும்

கோலாலம்பூர், அக் 7- தங்களிடம் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக மனித வள அமைச்சு சொக்சோ எனப்படும் சமுக பாதுகாப்பு நிறுவனத்தின் வாயிலாக முதலாளிகளுக்கு சுயப் பரிசோதனைக் கருவிகளை வழங்கும்.

கோவிட்-19 மீட்சி நிலைக்கான நோய்த் தொற்று சோதனைத் திட்டத்தின் கீழ் இந்த சுயப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படுவதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இத்திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பிக்காத முதலாளிகள் கிளினிக்குகளில் நிபுணத்துவ முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்.டி.கே. எனப்படும் விரைவு ஆண்டிஜென் சோதனைக் கருவிகள் அல்லது தொழிலாளர்கள் சுயமாக சோதித்துக் கொள்ள உதவும் கருவிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

தொழிலாளர்களுக்கு கோவிட்-19 சோதனையை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆர்.டி.கே. ஆண்டிஜென் கருவிகளை சொக்சோ நேற்று தொடங்கி முதலாளிகளுக்கு விநியோகித்து வருகிறது. ஆர்.டி.கே. ஆண்டிஜென் கருவிகளை பெறுவதற்கு இதுவரை 230,000 விண்ணப்பங்களை அது பெற்றுள்ளது என்றார் அவர்.

சொக்சோவில் முறையாக சந்தா செலுத்தி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாளிகளுக்கு இந்த பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

தொழிலாளர்களுக்கு கோவிட்-19 சோதனைகளை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்வதில் முதலாளிகளுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அறிக்கை ஒன்றில் சரவணன் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.