கிள்ளான் அக் 7 ;- கடந்த அக்டோபர் 4 ம் தேதி, மலாக்காவின் முன்னாள் முதல்வர் மாண்பு மிகு டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருன், மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து டத்தோஸ்ரீ சுலைமான் எம்டி அலிக்கு மலாக்காவின் முதலமைச்சராக இருக்க கொடுத்த ஆதரவை மீட்டுக்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் வழி லெண்டு சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா மாநிலத்தில் தனது பெரும்பான்மையை இழக்கச் செய்து, மேலும் அவர் மலாக்கா மாநில சட்டமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்து, யாங் டி-பெர்டுவா நெகிரி டான் ஶ்ரீ டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாமின் ஒப்புதலைப் பெற்றார்.
இதனால் மீண்டும் தேர்தல் நடத்தப் பட்டால், ஏற்படும் பலவித பாதிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது, ஏனெனில் நாடு இன்னும் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தில் உள்ளது. அந்த செயல் மேலும் அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதுடன் மற்றும் அதிக செலவுகளையும் ஏற்படுத்தும்.
மலாக்காவின் முதல்வர் செய்தது, நாட்டின் பொருளாதார மீட்பில் கவனம் செலுத்துவதற்காக அரசியல் சமரை தவிர்க மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் புறக்கணிப்பது போன்றது என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள் மலாக்கா மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை தெளிவாகப் பெற்றிருந்தால் மலாக்காவை வழிநடத்த அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பாரிசான் நேஷனல் மற்றும் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தேசிய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து கடைபிடித்தால், மலாக்கா மாநிலத்தில் சட்டசபை கலைப்புக்கும் மற்றொரு தேர்தலுக்கும் இடமளிக்க கூடாது.
மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் அதிக ஆதரவைப் பெற்ற பக்காத்தான் ஹராப்பானுக்கு அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகார மாற்றத்தை மேற்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். கடந்த காலங்களில், மலாக்காவின் முதலமைச்சராக ஒய் பி அட்லி ஜஹரியின் தலைமைக்கு சில மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றபோது, தேர்தல் நடத்தாமல் அமைதியாக அதிகார மாற்றம் நடந்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தப் படுவதைத் தடுக்க மலாக்காவை அவசரகால நிலையில் வைக்க தேசிய நிலை தலைவர்களிடமிருந்து ஆலோசனைகள் உள்ளன.
அவசரகால நிலைக்கு மலாக்காவை இழுப்பது மக்கள் நலன் சார்ந்த முடிவாகாது. ஏனென்றால் இது மலாக்காவுக்கு எதிர்மறையான விளைவுகளை அளிக்கும் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை வழி நடத்த மலாக்கா ADUN களால் நிராகரிக்கப் பட்ட அம்னோ தலைவர்களுக்கு அரசியல் வாழ்வளிக்கும் வழிமுறையாகும்.
தேசிய அளவில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கும் வண்ணம், கடந்த தேர்தலில் மலாக்கா மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து, மாநில அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பானிடம் திருப்ப ஒப்படைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்றார் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.


