HEALTH

பிரேதங்களை நல்லடக்கம் செய்வதிலும்  ஊழல்- 5 ஐந்து மருத்துவமனைப் பணியாளர்கள் கைது

7 அக்டோபர் 2021, 10:43 AM
பிரேதங்களை நல்லடக்கம் செய்வதிலும்  ஊழல்- 5 ஐந்து மருத்துவமனைப் பணியாளர்கள் கைது

ஷா ஆலம், அக் 7- இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியை வழங்குவதற்கு கைமாறாக தரகர்களிடம் லஞ்சம் கேட்டது மற்றும் பெற்றது தொடர்பில் மருத்துவமனை ஒன்றின் ஐந்து ஊழியர்களை எம்.ஏ.சி.சி. எனப்படும் ஊழல் தடுப்பூ ஆணைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம்  ஆண்டு வரை நடைபெற்றதாக கூறப்படும் இந்த ஊழல்  நடவடிக்கையில் இருபதாயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட  லஞ்சப் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் கூறின.

வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று மாலை 3.00 மணியளவில் எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்த போது 34 முதல் 44 வயது வரையிலான அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதை சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ அலியாஸ் சலிம் உறுதிப்படுத்தினார்.

இக்கைது நடவடிக்கை தொடர்பில் 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17(ஏ) பிரிவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்காக அவர்கள் இன்று ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.