ஷா ஆலம், அக் 7- ஷா ஆலம் 2021 புகைப்பட போட்டியில் பங்கேற்பதற்கான இறுதி நாள் நவம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புகைப்பட போட்டியில் அதிகமானோர் பங்கேற்பதற்கும் அதன் மூலம் அக்கலையில் அவர்கள் திறன்பெற்று விளங்குவதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை கூறியது.
இப்போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் www.mbsa.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
"நாங்கள் ஷா ஆலம் நகரை நேசிக்கிறோம்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த புகைப்பட போட்டி கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் பங்கேற்போர் கட்டிடங்கள், நினைவுச் சின்னம், இயற்கை வளம், வாழ்க்கை முறை, நிகழ்வுகள், புதிய இயல்பு ஆகிய பிரிவுகளில் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு செல்வோருக்கு 3,000 வெள்ளியும் இரண்டாம் இடத்திற்கு 2,000 வெள்ளியும் மூன்றாம் இடத்திற்கு 1,000 வெள்ளியும் ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா 200 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும்.
ECONOMY
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் புகைப்பட போட்டிக்கான தேதி நீட்டிப்பு
7 அக்டோபர் 2021, 10:17 AM


