கோலாலம்பூர், அக் 6- நாட்டில் 90 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசி பெறும் இலக்கை அடைய இன்னும் 2 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.நேற்று வரை நாட்டில் 88 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 6 லட்சத்து 98 ஆயிரத்து 852 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்றனர்.
அதேசமயம், 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 3.8 விழுக்காட்டினர் அல்லது 120,402 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
நாட்டில் நேற்று நேற்று 224,034 பேர் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றனர். அவர்களில் 121,153 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 101,881 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 4 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரத்து 925 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 117 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27,876 ஆக உயர்ந்துள்ளது
ECONOMY
கோவிட்-19 தடுப்பூசி இயக்கம்: இலக்கை அடைய 2 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது
6 அக்டோபர் 2021, 12:19 PM


